வகைப்படுத்தப்படாத

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகள்

(UDHAYAM, COLOMBO) – ஜனபதி நில மெஹவர’ என்ற நடமாடும் சேவையின் மீளாய்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று (11); ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அண்மையில் பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜனபதி நில மெஹவர’ நிகழ்ச்சித்திட்டத்தில் முன்மொழியப்பட்ட வகையில் ஹிங்குரான்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

தொழில், தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள மனிதவலு, தொழில்வாய்ப்பு திணைக்களமும் ஹிங்குரான்கொடை பிரதேச செயலாளர் அலுவலகமும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

Related posts

Narammala Pradeshiya Sabha Dep. Chairman further remanded

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது

No evidence to back allegations against Dr. Shafi – CID