அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நபர் கைது!

பண்டாரகம வேவிட்ட குளத்தை சட்டவிரோதமாக நிரப்பிய சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.

குறித்த குளத்தின் சுமார் 8 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட பகுதியை சந்தேக நபர் நிரப்பியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விவசாய ஆராய்ச்சி அதிகாரி பண்டாரகம பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது ?

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

editor

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் கருவி