இபலோகம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தனது வீட்டில் சூதாட்ட நிலையத்தை நடத்தி வந்த நிலையில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் இபலோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டைச் சோதனையிட்டபோது, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ கிராம் மான் இறைச்சியையும் பொலிஸார. கண்டுபிடித்தனர..
சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினரையும் அவரது குழுவினரையும் நேற்று (05) கெகிராவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
குறித்த பிரதேச உறுப்பினர் தம்புத்தேகம விசேட குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் பணமோசடி வழக்கு தொடர்பான வழக்கு தொடர்பாக கைது செய்யத் தேடப்படும் நபர் என்று பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
இதன்படி, அவரை இந்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறிநலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், இபலோகம பிரதேச சபை உறுப்பினரும், புஞ்சிக்குளம், இபலோகமவைச் சேர்ந்தவருமான அஜந்த பியகம ஆவார்.