வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு

(UTV|COLOMBO)-அரசாங்கத்தை தொடர்ந்து அவ்வாறே முன்னெடுப்பதற்கு பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தேவையென்றால் ஸ்ரீலாங்க சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக முடியும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று   மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு [UPDATE]

Senior DIG Latheef testifies before PSC

උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයා යාපනය ආරක්ෂක‍ සේනා ආඥාපති හමුවෙයි