சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று மீண்டும் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் மற்றொரு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் மற்றும் கட்சியின் பதவி நிலைகள் உருவாக்குதல் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படு உள்ளது.

நாளை (26) ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் புதிய பதவி விபரங்களை முன்வைக்க வேண்டும் என்பதால், இன்று இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதேவேளை நேற்று இடம்பெற்ற அந்தக் கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டத்தில் இறுதித்த தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என்று ஏற்கனவே ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கட்சியின் உறுப்பினர் ஜே.சி. அலவதுவல கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்

24 பேர் அதிரடியாக கைது