அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்சித் தடையினை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.

செப்டம்பர் 6 ஆம் திகதி கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்சித் தடையை நீக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதனிடையே, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளினது செயலாளர்களின் கூட்டம் ஒன்றும் இன்று நடைபெற்றது.

Related posts

அவுஸ்திரேலியாவில் இருந்த 272 பேர் நாடு திரும்பினர்

நீர் கட்டணப் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு

நாடளாவிய ரீதியான மின்துண்டிப்பு தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்