அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக முன்னாள் எம்.பி நவீன் திஸாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, அக்கட்சியின் உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 2026 ஆம் ஆண்டிற்காக யாப்பின் 8.1.1(c) சரத்திற்கு அமைய, நவீன் திஸாநாயக்க இவ்வாறு உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 2026 ஜனவரி 3 ஆம் திகதி முதல் நவீன் திஸாநாயக்கவை சிரேஷ்ட உப தவிசாளராக பெயரிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் யாப்பின் 7.1 (a) சரத்திற்கு அமைய, திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் செயற்படவுள்ளார்.

Related posts

மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமான சேவையிடம் இருந்து விசேட கோரிக்கை

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!