அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) நடைபெற்றது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகொரள, மற்றும் உதவி தலைவர் அகில விராஜ் காரியவசம், வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

-பிரதீபன்

Related posts

அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணி

சனி அல்லது ஞாயிறு தினங்களில் தீர்மானம் எட்டப்படும்