அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றுள்ளது.

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தவிசாளர் நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலின் போது இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது X கணக்கில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அது வெற்றிகரமான முடிவை நோக்கி இட்டுச் செல்லும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ஊரடங்கை மீறிய 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சூடு பிடிக்கும் அரசியல் – ரணிலின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்

editor

ஐவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

editor