தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று (28) அதிகாலை 2 மணி முதல் நாளை (29) பிற்பகல் 2 மணி வரையான 24 மணி நேர காலப்பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையின் மூன்றாம் மட்டத்தை (சிவப்பு) வெளியிட்டுள்ள இந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம்
பதுளை
ஹாலிஎல
கந்தகெட்டிய
பசறை
மீகஹகிவுல
ஊவ பரணகம
வெலிமடை
லுணுகல
எல்ல
பண்டாரவளை
சொரணாதோட்ட
கண்டி மாவட்டம்
உடுபலாத்த
கங்காவட்ட கோரளே
உடுதும்பர
தொழுவ
மினிப்பே
பாத்தஹேவாஹேட்ட
மெததும்பர
தெல்தோட்ட
அக்குரணை
கங்காயிஹல கோரளே
பாத்ததும்பர
யட்டிநுவர
தும்பனே
உடுநுவர
ஹாரிஸ்பத்துவ
பூஜாபிட்டிய
பஸ்பாகே கோரளே
பன்விலை
ஹதரலியத்த
குண்டசாலை
கேகாலை மாவட்டம்
மாவனெல்லை
ரம்புக்கணை
அரநாயக்க
புளத்கொஹுபிட்டிய
களிகமுவ
கேகாலை
யட்டியாந்தோட்டை
தெஹியோவிட்ட
குருணாகல் மாவட்டம்
ரிதிகம
மாவத்தகம
மல்லவபிட்டிய
மாத்தளை மாவட்டம்
நாவுல
ரத்தோட்ட
அம்பன்கங்கை கோரளே
உக்குவெல
வில்கமுவ
யட்டவத்த
மாத்தளை
பல்லேப்பொல
லக்ககல
பல்லேகம
மொனராகலை மாவட்டம்
பிபில
மெதகம
நுவரெலியா மாவட்டம்
வலப்பனை
ஹங்குராங்கெத்த
நில்தண்டஹின்ன
மத்துரட்ட
நுவரெலியா
கொத்மலை மேற்கு
கொத்மலை கிழக்கு
அம்பகமுவ
தலவாக்கலை
நோர்வுட்
