உள்நாடு

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையானது இன்று (15) மாலை 7.30 மணி முதல் நாளை (16) மாலை 7.30 மணிவரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை – 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் – உடநுவர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

மாத்தளை மாவட்டம் – பல்லேபொல மற்றும் அம்பன்கங்க கோரலே பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

கேகாலை மாவட்டம் – யட்டியாந்தொட்டை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

குருநாகல் மாவட்டம் – ரிதிகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவு அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

மொனராகலை மாவட்டம் – மெதகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

காலி மாவட்டம் – நெலுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

Related posts

இன்னும் 20 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பில் உள்ளது

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்