வணிகம்

ஏற்றுமதி துறையின் பின்னடவை சீர் செய்யுமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-ஏற்றுமதி துறையில் ஏற்பட்டிருந்த பின்னடைவை சீர்செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஏற்றுமதி தரப்பினர் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை ஏற்றுமதிக்கான தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விடுத்துள்ளார்.

இதற்கு ஏற்ற திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வரையிலான காலப்பகுதியினில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதற்கு அமைய இந்த வருட இறுதியினில் 17 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதிக்கான தேசிய வர்த்தக சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

தென்மாகாணத்தில் இறால் , கடல்நண்டு ஏற்றுமதி களப்பு அபிவிருத்தி

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்