உள்நாடு

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள் வெளியாகும்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதக்காலங்கள் தேவைப்படுகிறது

அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வௌியிட முடியும் என நினைகிறேன்” என்றார்.

Related posts

ஜனாதிபதி அநுர கடந்த 6 மாதங்களில் எவ்வித சேவையும் செய்யவில்லை – நாமல் எம்.பி

editor

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று