சூடான செய்திகள் 1

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) –  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 05 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாபா, எஸ்.பீ.திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியவர்களுக்கு எதிராக இந்த தீர்மானம் கட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மது மாதவ அரவிந்தவ கைது!

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை