உள்நாடு

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளது

(UTV |  எகிப்து) – உலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் கடந்த 23 ஆம் திகதி தரை தட்டியிருந்த எவர் க்ரீன் நிறுவனத்திற்கு சொந்தமான ‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக சுயஸ் கால்வாய் நிர்வாகத்தினரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கப்பல் சிக்கியிருந்தமையினால் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், சுமார் 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் கால்வாயின் இருமறுங்கிலும் நங்கூரமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீட்புக்குழுவினரினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ்கால்வாயின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க தெரிவு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

editor

SLFPயின் புதிய நியமனம்!