வணிகம்

எல்ல பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் உன்னதமான பயணப்பிரதேசமாக எல்ல பிரதேசம் அமைந்துள்ளமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மலையக ரயில் பாதையின் ஊடாக மலையகத்தின் இயற்கை அழகை காண்பதற்காக எல்ல பிரதேசத்துக்கு சுற்றுலாப்பயணிகள் ரயில் மூலம் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றின் வருமானங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

குவாதர் பொருளாதார ஆற்றலை மேலும் வலுப்படுத்தல்

முட்டை விலை ரூ. 2 இனால் குறைவு

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்