உள்நாடு

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

-பிரதீபன்

Related posts

அவுஸ்திரேலியாவில் இருந்த 272 பேர் நாடு திரும்பினர்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

editor

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்