அரசியல்உள்நாடு

எல்பிட்டிய தேர்தலின் தற்போதைய நிலவரம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று முற்பகல் 10.00 மணியளவில் 25% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 55,643 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏழு விமானங்கள் ரத்து!

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor