உள்நாடுதொழிநுட்பம்

எலோன் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு – ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்!

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார்.

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுத்தது.

இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்பதால், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

75வது சுதந்திரக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அமைச்சரவை துணைக் குழு

பாராளுமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor

வரவு செலவுத் திட்டம் 2022 : இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று