வகைப்படுத்தப்படாத

எரிமலை வெடிப்பு காரணமாக மூடப்பட்ட பாலி விமான நிலையம் மீண்டும் திறப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. இங்குள்ள பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது.

எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், எரிமலை சீற்றத்தின் காரணமாக பாலி தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. எரிமலையில் இருந்து வெளிவரும் கரும்புகையால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று விமான நிலையம் திறக்கப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Luxury goods join Hong Kong retail slump as protests bite

பிரான்ஸ் ஜனாதிபதியால் புதிய பிரதமர் அறிவிப்பு

Strong winds to reduce over next few days