உள்நாடு

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலைகள் இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ஒப்பிடுகையில், லங்கா இந்தியன் ஒயில் (IOC) நிறுவனமும் தனது விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 470 ரூபாவாகும்.

* 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி புதிய விலை 550 ரூபாவாகும்.

* ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு புதிய விலை ரூ.460.

* சுப்பர் டீசல் பெட்ரோல் லீட்டர்ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 520 ரூபாவாகும்.

No photo description available.

Related posts

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்