உள்நாடு

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த விலைத் திருத்தத்தின்படி, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபாவாகும்.

அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி,

எரிபொருள் வகை பழைய விலை (ஒரு லீற்றர்), புதிய விலை (ஒரு லீற்றர்), விலை மாற்றம்

95 ஒக்டேன் பெற்றோல், ரூ. 335.00, ரூ. 335.00, மாற்றமில்லை.

லங்கா ஒட்டோ டீசல் , ரூ. 277. 00, ரூ. 277.00, மாற்றமில்லை.

மண்ணெண்ணெய் , ரூ. 180 .00, ரூ. 180.00, மாற்றமில்லை.

Related posts

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி

நான்காவது டோஸ் யாருக்கு?

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று முதல் மக்கள் பாவனைக்கு..