உள்நாடு

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 307 ரூபாயை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


பஸ் கட்டண தேசிய கொள்கைகளுக்கு அமைய, 4 சதவீதமான எரிபொருள் குறைப்புக்கு மாத்திரமே கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும் எனவும் நேற்றைய தினம் டீசல் விலை 2.5 சதவீதமே குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

கோப் மற்றும் கோபா குழு உறப்பினர்கள்