உள்நாடு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலையும் குறையும்

(UTV | கொழும்பு) – எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை இருபது வீதத்தால் குறைக்கப்படும் எனவும் எரிவாயு விநியோகம் மிக அதிகமாக நடைபெறுவதால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான உணவகங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எல்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எரிபொருளின் விலை கணிசமாகக் குறையும் பட்சத்தில் தனது உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை இருபது வீதத்தால் குறைப்பதாகவும் அசேல தெரிவித்தார்.

இதன்படி, தேநீர் இலிருந்து சோற்றுப் பொதி, கொத்து ஆகியவற்றின் விலையும் கணிசமாக குறையும் என என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 981 ஆக அதிகரிப்பு

வெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு