உள்நாடு

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவுக்கும், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 95 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவுக்கும் 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றர் 305 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேற்குறிப்பிட்ட விலைகளிலேயே எரிபொருள் விற்பனை தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

SJB தீர்மானத்திற்கு எதிராக டயனா உயர் நீதிமன்றில் மனு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

தேர்தலில் மொட்டும் யானையும் சேர்ந்து போட்டியிடுமா?