உள்நாடுவிசேட செய்திகள்

எரிபொருள் விலைகள் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாவாகும்

எவ்வாறாயினும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியன ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தீர்மானம்

இலத்ததிரனியல் வணிகத் தளங்களுக்கான வரிவிதிப்புத் தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட்டன

editor

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்