உள்நாடு

எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் இன்று (03) முதல் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்தின் பின்னர் அது வழமைக்கு திரும்பும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாமதமின்றி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 37,300 மெற்றிக் தொன் டீசல் தொகை இன்று பிற்பகல் தரையிறங்கப்படவுள்ளது.

Related posts

எனது அமைச்சு பதவியிலிருந்து நீங்கிவிட்டேன் – காஞ்சன விஜேசேகர

editor

இன்றைய வெப்பச்சுட்டெண்

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor