உள்நாடு

எரிபொருள் நெருக்கடியினை சமாளிக்க அரசுக்கு யோசனைகள் முன்வைப்பு

(UTV | கொழும்பு) – பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இத்தருணத்தில் எரிபொருள் பாவனையை குறைக்கும் அவசர யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாரத்தில் ஒரு நாள் பாடசாலைகளை காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தவும், வெவ்வேறு நேரங்களில் அலுவலகங்களை திறக்கவும் அமைச்சர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும், கொழும்புக்கு வரும் வாகனங்களை கட்டுப்படுத்துமாறும் அமைச்சர் யோசனை முன்வைத்துள்ளார்.

அரச நிறுவனங்களின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளுக்கு அதிகாரிகளை அழைப்பதை மட்டுப்படுத்தவும், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களை கொழும்புக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தவும் அமைச்சர் தனது யோசனையில் முன்மொழிந்துள்ளார்.

இதேவேளை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தொழில்துறையினர் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி தங்கள் தொழிற்சாலைகளுக்கு ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்துமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வர்த்தக வங்கிகள் மூலம் பெறப்படும் வெளிநாட்டுப் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை மத்திய வங்கிக்கு மாற்றி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்ட போதிலும், தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், பொழுது போக்கு, குடும்ப சந்திப்பு, உல்லாசப் பயணங்கள், இன்பங்கள் போன்றவற்றுக்கான பயணங்கள் அதிகரிப்பதும் இந்த அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக பொதுப் போக்குவரத்து சேவைகளுக்குப் பதிலாக தனியார் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளமையும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் அடுப்புகளின் பாவனை அதிகரித்தமையும் அதிகரிப்புக்குக் காரணமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

eye-one சிறப்பு புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கிய சஜித்

editor

ரந்தெனிகலையில் பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்

editor

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு