சூடான செய்திகள் 1

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

(UTV|COLOMBO) தொம்பே, கிரிதர பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அங்கு கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி 210,800 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாதத்தில்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயருக்கு 5 வருட சிறை