உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமத்தில்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதனால் பஸ் நடத்துனர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. தனியார் பேருந்து நடத்துனர்கள் தற்போது டீசல் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

மின்கட்டணத்திற்கு சலுகை..?

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து