உள்நாடு

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

பெற்றோல் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்!

பாணின் விலையினை 50 ரூபாவினால் குறைக்க முடியும்