சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…

(UTV|COLOMBO) மாதத்திற்கு ஒருமுறை அமுலாகும் எரிபொருள் விலையை சீர்த்திருத்தம் செய்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று ஒன்றுக்கூடவுள்ளது.
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும்.
எனினும், இன்றைய தினம் பெரும்பாலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, புதுவருடத்தின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

உலமா சபைக்கும், பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

editor

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்