உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பதற்றம் வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள் வழமையான முறையில் இடம்பெறுவதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

ஆறு பேருக்கு மரண தண்டனை

கூட்டத்தை பார்த்து தீர்மானிக்காதீர்கள் – திலித் ஜயவீர

editor

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை