அரசியல்உள்நாடு

எம்பிக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்கு பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றுக்கு அழைக்குமாறு கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க பொலிஸ் மா அதிபருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சபாநாயகர் தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், குறித்த கடிதம் சபாநாயகர் அலுவலகம் ஊடாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.

அதன்படி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஒரு திகதியை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

‘நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுங்கள்’

எல்ல-வெல்லவாய விபத்து – கைதான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

editor