உள்நாடு

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) –   ‘அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொவிட் தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அனைத்து சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன இன்னமும் பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப்பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளதென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலுக்கு மத்தியில், மூத்த தலைமுறையினரைப் பாதுகாப்பதற்காக முன்னெடுத்த கலந்துரையாடல்கள், திட்டமிடல் நடவடிக்கைகளினூடாக, இன்று சாதகமான பலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக, முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் நடைமுறையாகும் இலக்க முறை

ரவி செனவிரத்னவின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது

editor

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா