வகைப்படுத்தப்படாத

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

(UTV|NORTH KOREA)-வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், வர்டகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க  நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மனு

Police investigate death of ten-month old twins

அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு