வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – இன்று நிறைவு விழா

(UTVNEWS|COLOMBO)- யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் நிறைவு விழா இன்று(10) நடைபெறவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தலைமையில் இன்று(10) மாலை நடைபெறவுள்ளது.

கண்காட்சி கடந்த 7 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

கண்காட்சியின் இறுதி நாளான இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலானோர் கண்காட்சிக்கு வருகைதந்திருப்பதுடன், இது வரையில் கண்காட்சியை 3 இலட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 55 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கென 90 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன மேலும் தெரிவித்தார்.

Related posts

அம்பாறையில் பெரிய வெங்காயச் செய்கை

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்