உலகம்

எனக்கு நோபல் பரிசு தர வேண்டும் – அடம்பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானகிவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் இடையே மூண்ட 7 போர்களை நிறுத்திவிட்டேன்.

ரஷ்ய – உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன் என்று தொடர்ந்து கூறி வரும் அவர், உலக நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கூறிவருகிறார்.

தற்போது இஸ்ரேல்-காஸா போரையும் நிறுத்திவிட்டேன், எனவே நோபல் பரிசு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்ரம்ப் கூறியுள்ளதாவது;

நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். (காஸா-இஸ்ரேல் போரை குறிப்பிடுகிறார்) ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

அனைத்து அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் இதனை ஒப்புக் கொண்டு இருக்கின்றன.

இஸ்ரேல் ஒப்புக்கொண்டுவிட்டது. அது ஒரு அற்புதமான விடயம். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.

Related posts

போர் நிறுத்த இழுபறிக்கு மத்தியில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு – ஒருவர் பலி

editor

புதிய வரிக் கொள்கையை 90 நாட்களுக்கு நிறுத்திய அமெரிக்கா

editor

இஸ்ரேல் வசமான ஹமாஸின் இராணுவ மையம்!