உள்நாடு

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார்

(UTV | கொழும்பு) – கொவிட் பெருந்தொற்று தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பளார் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இலங்கையில் 21,000 கோவிட் மரணங்கள் பதிவாகும் என வொஷிங்டன் பல்கலைக்கழக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டமை குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் புதிதாக நோய்த் தொற்றாளர்கள் பதிவாவதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் – ஜீவன் தொண்டமான்