உள்நாடு

எதிர்வரும் 28ம் திகதி மாபெரும் வேலை நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“நாம் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தோம். நாங்கள் நாளை வேலைக்குச் செல்வோம். அதேபோன்று 28ஆம் திகதியும் அரசாங்கம் தொடர்ந்தும் இருந்தால், 28ஆம் திகதி துறைமுகம், ரயில்வே, வங்கிகள் மற்றும் அனைத்து அரச மற்றும் அரை அரச சேவைகள் என அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அந்த செயல்முறையை நாங்கள் தீவிரமாக முன்னோக்கி கொண்டு செல்வோம், ”என்று அவர் கூறினார்.

Related posts

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

இலங்கையில்: 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்