உள்நாடு

“எதிர்வரும் 2ம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

(UTV | கொழும்பு) – அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் சங்கங்கள், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னணி சோசலிசக் கட்சி உள்ளிட்ட சிவில் ஆர்வலர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தினாலும், நூறு ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தும் உரிமையை நசுக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts

இன்றும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை

 இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்