கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு கௌரவ சபாநாயகர் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.
