சூடான செய்திகள் 1

எதிர்வரும் 17ம் திகதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்துள்ளது அதன்படி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர கூறினார்.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

 

 

 

Related posts

கல்வீச்சு தாக்குதலில் ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் காயம்

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

எதிர்வரும் 26ஆம் திகதி ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில்