வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் 11 ஆம் திகதி இஸ்ரேல் பிரதமர், இந்தியா விஜயம்

(UTV|COLOMBO)-இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நேத்தன்யாகு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

டெல்லியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பல தரப்பட்ட விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்படவுள்ளன.

இஸ்ரேலின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேல் பிரதமர் பல நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

 

 

 

 

Related posts

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே”

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது- முற்றுகை நடவடிக்கை ஆரம்பம்

உட பலாத்த உப பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமனம் வழங்கும் புண்ணியநிகழ்வு