கிசு கிசு

எதிர்வரும் வாரமும் மின்வெட்டு தொடரும் – PUCSL

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் மின்வெட்டு காலத்தை குறைக்கவோ அல்லது நிலைமையை நிர்வகிக்கவோ முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இந்த நாட்களில் ஏழரை மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருளை வழங்குவதற்கு ஜனாதிபதி மற்றும் ஏனைய அரசியல் அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும், எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மின்வெட்டை குறைக்கவோ அல்லது நிர்வகிக்கவோ முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்த சனிக்கிழமையுடன் மின்வெட்டு முடிவுக்கு வரும் என கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, ​​சனிக்கிழமையும் மின்வெட்டு தேவைப்படாது என மின்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

பசில் ராஜபக்ஷ ஆட்சியமைக்க களத்தில்

பிரதமர் பதவியில் போட்டியிட மஹிந்த முடிவு?

மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி [PHOTO]