சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

(UTV|COLOMBO) நாட்டில் அடுத்த சில நாட்களில் (ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து) தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

editor

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…