உள்நாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார்? விரைவில் தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விரைவில் பேச்சுவார்த்தை

கட்சியின் வேட்பாளார் யார் என்பதனை தீர்மானிக்கும் நோக்கில் கட்சியின் தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெற்கு ஊடமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

 

 

 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற போதிலும் கட்சியின் இறுதித் தீர்மானம் அதிகாரபூர்வமாக எடுக்கப்படவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் கூடுதல் கரிசனை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஐ.எஸ் விவகாரம்: ஒஸ்மான் ஜெராட் கைதுவுக்கு பின் நடந்த உத்தரவு என்ன?

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு – 30 பேர் பலி

editor