உலகம்

எதிர்க்கட்சியின் வெற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு துன்பகரமான பின்னடைவு – ட்ரம்ப் அதிரடி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்கட்சியின் வெற்றி தொடர்பில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இது தொடர்பில் தளத்தில் தெரிவிக்கையில்;

“2020 ல் ஜனநாயகக் கட்சியின் வெற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு துன்பகரமான பின்னடைவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமை பற்றி அந்நாட்டு பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றுள்ளது

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி

ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை ஆப்பிரிக்கா கோருகிறது