அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்துக்கும் இடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை (07) கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அங்கு இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு சந்தித்து கலந்துரையாடினர்.

அவுஸ்திரேலியவுக்கும் இலங்கைக்கும் இடையிலே நிலவி வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி இங்கு சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நமது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு அவுஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Related posts

ஒரு தொகை மஞ்சளுடன் நால்வர் கைது

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்