உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டோர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் முகமாக கொழும்பு 7, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்து காணப்படும் எதிர்க்கட்சி அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையமொன்று இன்று (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இதுவரை தீர்க்கப்படாது காணப்படும் பிரச்சினைகளை கிராம அலுவலர் மட்டத்தில் ஒன்று திரட்டுவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்து காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை இந்த தகவல் மையத்திற்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் நேரடியாகத் தெரிவிக்கலாம் அல்லது WhatsApp மூலம் அனுப்பி வைப்பதற்கான வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் நிமித்தம் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

0759 570 570
0761 660 570
0705 699 110

தகவல் மையத்துக்கு கிடைக்கபெறும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு இந்த மையம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்த தகவல் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இயங்கும்.

ஊடகப் பிரிவு
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
10.12.2025

Related posts

IOC எரிபொருள் விநியோகம் முன்னேறுகிறது

“இப்போதைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி தெரியாது” டயான கமகே எம்பி உரை

STF முகாம்கள் 3 தனிமைப்படுத்தலுக்கு